டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த பாராலிம்பிக்ஸ்போட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று சாதித்தனர். ஐந்து தங்கப் பதக்கங்களோடுமொத்தமாக 19 பதக்கங்களைவென்று இந்திய பாராலிம்பிக்ஸ்வீரர்கள் அசத்தினர்.
இந்தநிலையில், பாராலிம்பிக்ஸில்பதக்கங்களைவென்ற வீரர்களுக்கு நேற்று (08.09.2021) பாராட்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும்தற்போதைய சட்டத்துறை அமைச்சருமானகிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களைக் கவுரவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பாராலிம்பிக்ஸில்கலந்துகொண்ட இந்திய குழுவை இன்று தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் வீரர் / வீராங்கனைகளுடன்கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.