Advertisment

நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

PM Modi to meeting with state chief ministers tomorrow

இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனாபரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (21.04.20210) ஒரேநாளில்3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. ஒரேநாளில்மூன்று லட்சம் பேருக்கு கரோனாஉறுதியாவது இந்தியாவில் இது முதல்முறையாகும்.

Advertisment

கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க்கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.

Advertisment

நாடுமுழுவதும்ஆக்சிஜன்பற்றாக்குறை நிலவிவரும் நிலையில்இன்றுமத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில்நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியைஉடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை மேற்குவங்கம்செல்ல இருந்த பிரதமர் மோடி, தனது பிரச்சாரப் பயணத்தை ரத்துசெய்துள்ளார். கரோனாநிலை குறித்து நாளை உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நடத்த இருப்பதால், நாளை மேற்கு வங்கத்திற்குச் செல்லவில்லை என மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கரோனாபாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன்கரோனாதடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு கரோனாபாதிப்பு தொடர்பாக ஆய்வுக்கூட்டமும், நண்பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடனும் ஆலோசிக்கவும்இருக்கிறார் பிரதமர்.

meetings chief minister corona virus modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe