ஜுன் 21ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யோகா தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவின் மைசூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பொதுமக்களுடன் இணைந்து யோகா செய்த பிரதமர் மோடி, “கரோனா பெருந்தொற்று காலத்தில் பலரது வாழ்க்கையின் அச்சாணியாக யோகா இருந்தது. யோகா என்பது இந்தியாவின் அங்கமாக மட்டுமின்றி தற்போது சர்வதேச அங்கமாக மாறியுள்ளது. ஒவ்வொரு தனிநபர்களும் ஒவ்வொரு பிரபஞ்சம். தனிநபர்களை நெறிப்படுத்தக்கூடிய அங்கமாக யோகா இருக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் இருக்க வேண்டுமென்றால் யோகா அவசியம்” எனத் தெரிவித்தார்.