நீதிமன்றத்தின் அதிருப்திக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!

modi

இந்தியாவில்தற்போது இயங்கி வரும் பாராளுமன்றகட்டிடம்93 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆதலால், இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக, புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதியபாராளுமன்றகட்டிடடம், அதிகமான உறுப்பினர்கள் அமரும் வகையில், நான்கு தளங்களோடு, 971 கோடியில்காட்டப்படவுள்ளது.

இந்தநிலையில், புதிய நாடளுமன்ற கட்டிடத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வாங்கவில்லை என்பதுஉள்ளிட்ட பல்வேறு புகார்களைதெரிவித்து, அதற்கு எதிராகஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்தவழக்குகடந்த7 ஆம் தேதி விசாரணைக்குவந்தது. அப்போது நீதிபதிகள், புதிய நாடளுமன்றகட்டிடத்திற்கு எதிராகவழக்கு நிலுவையில்இருக்கையில், அதன்கட்டுமானப் பணிகளைஎப்படி தொடங்கலாம்எனஅதிருப்தி தெரிவித்ததோடு, கட்டுமானப் பணிகளைதொடங்கமால்பூமி பூஜை மட்டும் நடத்தலாம் எனஅனுமதியளித்து உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி, இன்று மதியம் 1 மணிக்குநடக்கும்விழாவில்,புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

Narendra Modi Parliament Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe