இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்ட 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில மாநில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகபுகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில்இன்று (19.04.2021) காலை பிரதமர், கரோனாபரவல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று மாலை4.30 மணியளவில் இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களோடுபிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், மாலை 6.30 மணியளவில் இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்களோடு பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.