தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஆறு மாநில முதல்வர்களோடு 16ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

narendra modi

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் கரோனாமூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையொட்டி பல்வேறு மாநிலங்கள் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன. இந்நிலையில், வரும் 16ஆம் தேதி பிரதமர் மோடி மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.

காணொளி வாயிலாக, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்ட்ரா, கேரளா ஆகிய மாநிலங்களின்முதல்வர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலங்களில் நிலவும் கரோனாநிலை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Kerala Narendra Modi TAMILANDU
இதையும் படியுங்கள்
Subscribe