பழங்குடியின மக்களின் உரிமைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பிர்சா முண்டாவின் பிறந்தநாளை (நவம்பர் 15)ஜன்ஜாதிய கௌரவ் திவாஸாக கொண்டாட மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவெடுத்தது. மேலும், ஜன்ஜாதிய கௌரவ் திவாஸைமுன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது.
இந்தநிலையில்,பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டிபிரதமர் மோடி இன்று (15.11.2021) பிர்சா முண்டாவின் நினைவாக அருங்காட்சியகம் ஒன்றைக் காணொளி வாயிலாக திறந்துவைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இது தனிப்பட்ட முறையில் தனக்கு உணர்ச்சிகரமான நாள் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "எனதுவாழ்க்கையின் பெரும்பகுதியைபழங்குடியின சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குழந்தைகளுடன் கழித்துள்ளேன். அவர்களின் இன்ப துன்பங்களுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும், அவர்களின் வாழ்க்கைதேவைகளுக்கும் நான் சாட்சியாக இருந்துள்ளேன். எனவே, இன்று எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்ச்சிகரமான நாள்" என தெரிவித்துள்ளார்.