இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்பிவருவதோடு, அந்தப் பிரச்சனைகள் தொடர்பாக அமளி செய்து அவையை அவ்வப்போது முடக்கிவருகின்றனர்.
இந்தச் சூழலில்பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் இன்று (07.12.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாகவும், நிறைவேற்றப்படவுள்ள முக்கிய சட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையேஇந்தக் கூட்டத்தில், பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடிய பிர்சா முண்டாவின் பிறந்தநாள் 'ஜன்ஜாதிய கௌரவ் திவா’ஸாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்காகபிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.