Advertisment

ஆரத்தழுவிய பிரதமர்; கலங்கிய சந்திரபாபு நாயுடு - பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி 

PM Modi greets Chandrababu Naidu at the inauguration ceremony

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி வீழ்த்திஅமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4 முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கேசரபள்ளி ஐ.டி. பூங்கா அருகே நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisment

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சிவி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், தமிழிசை சௌதரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவிய பிரதமர் மோடி சிறுது நேரம் கட்டி அணைத்திருந்தார். அந்தநேரத்தில் சந்திரபாபு நாயுடு கலங்கியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe