பிஎம் கேர்ஸ் மூலம் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் - நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

pm modi

பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் முதல் வாரத்தில்உத்தரகாண்ட் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளுவார்எனவும், அந்த பயணத்தின்போதுஆக்சிஜன் ஆலையை தொடங்கி வைக்கவுள்ளதாகவும், விமான நிலையம் மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆகியவை சம்மந்தப்பட்டஉட்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும்ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்தநிலையில்பிரதமர் மோடி நாளைரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லவுள்ளதைஉறுதி செய்துள்ள பிரதமர் அலுவலகம், நாளைரிஷிகேஷ் எய்ம்ஸில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிஎம் கேர்ஸ் மூலம் இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 35பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்எனவும் கூறியுள்ளது.

மேலும் இந்த 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுவதன் மூலம், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஒருபிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இதுவரை1,224பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளுக்குபிஎம் கேர்ஸ் மூலம் நிதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில்1,100 க்கும் மேற்பட்ட ஆலைகளில் நாளொன்றுக்கு1,750 எம்.டி ஆக்சிஜனை உற்பத்திசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.

Narendra Modi oxygen pm cares
இதையும் படியுங்கள்
Subscribe