kangana with ranaut

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத், ஜனநாயக நாட்டின் சரியான தலைவர் பிரதமர் மோடி என்றும் அரசியலுக்கு வர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘சலோ ஜீத் ஹைன்’ என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியவர்," இப்படம் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இளமை பருவத்தில் எப்படி உணர்வுபூர்வமாக இருந்தார் என்பதை விளக்குகிறது. ஆனால், நான் இது அவரைப்பற்றிய படமாக கருதவில்லை, இது நம்மை பற்றிய படம்" என்று கூறியுள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

"பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் மோடி. ஜனநாயக நாட்டின் சரியான தலைவர் அவர். நாம் அவருக்கு வாக்களித்து பிரதமராக தேர்ந்தெடுத்தோம். அதேநேரம் கடும் உழைப்புக்கு பிறகுதான் அவர் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு நாட்டை புதை குழியிலிருந்து மீட்பதற்கு 5 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவான காலம். எனவே, வரும் 2019 தேர்தலிலும் அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற முடியும்” என்று 4 ஆண்டுகால மோடி ஆட்சியை பற்றி கூறியிருந்தார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

மேலும், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கங்கனா," என்னுடைய சேவை இந்த நாட்டின் தேவை என்ற சூழல் ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன்" என்று கூறியுள்ளார்.