PM Modi consults with all state chief ministers tomorrow

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை59,662-லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை1,981- லிருந்து2,109 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாடுமுழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன்பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது பொது முடக்கமானது நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை பிற்பகல் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.