Advertisment

"கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்த்துகள்"- பிரதமர் மோடி..

modi

விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும்உழவர்ரயில் சேவை(கிசான்ரயில்)கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.இந்த சேவையின்முதல் ரயில்,மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார்மாநிலத்தின்தனபூர்இடையே தனது பயணத்தைத்தொடங்கியது.

Advertisment

இந்தநிலையில், இந்த உழவர்ரயில் சேவையின்100வது ரயிலின்பயணத்தை,மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையேபிரதமர் மோடிஇன்று காணொலிகாட்சிமூலமாகத் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உழவர் ரயில்கள் விவசாயிகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய படியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "உழவர் ரயில் விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய படியாகும்.நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகள். கோவிட்19-ன் சவால் இருந்தபோதிலும், உழவர் ரயில் சேவைகடந்த நான்கு மாதங்களில் விரிவடைந்து இப்போது அது தனது100 வது ரயிலைப் பெற்றுள்ளது.உழவர் ரயில் ஒரு நகரும் குளிர் சேமிப்பு வசதி போன்றது. பழங்கள், காய்கறிகள், பால், மீன் போன்ற அழிந்துபடக்கூடிய பொருட்களை சரியான நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும்"என கூறினார்.

farm bill Farmers Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe