திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்படுவது கண்டனத்திற்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அன்று முதல் இன்றோடு நான்கு நாட்கள் ஆகியும், அம்மாநிலத்தில் பா.ஜ.க.வினரின் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம் திரிபுரா மாநிலம் பெலோனியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட சோவியத் புரட்சியாளர் லெனின் சிலை பா.ஜ.க.வினரால் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நேற்று சப்ரூன் பகுதியில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை நொறுக்கி, தரைமட்டமாக்கியுள்ளனர் பா.ஜ.க.வினர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பிரதமர் மோடி பேசியதாகவும், நாட்டின் எந்தமூலையிலும் சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவது வன்மனையான கண்டனத்திற்குரியது எனக்கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.