இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்ட 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில மாநில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகபுகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், நாட்டில் கரோனாபரவல் குறித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடுஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவது குறித்தும்விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி, கடந்த 17ஆம் தேதி பல்வேறு அமைச்சகங்களின் உயர்அதிகாரிகளோடுஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.