உயரதிகாரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை!

narendra modi

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.

அதேநேரத்தில்தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கரோனா திரிபு, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சில நாடுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் அதனைச்சுற்றியுள்ள நாடுகளிலிருந்து பயணிகள் தங்கள் நாட்டிற்குவர தடை விதித்துள்ளன.

அதேபோல்,தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்பிரதமர் நரேந்திர மோடி, கரோனா சூழ்நிலை குறித்தும், தடுப்பூசி திட்டத்தின் நிலை குறித்தும் இன்று (27.11.2021) காலை 10.30 மணியளவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனையில் புதிய கரோனாதிரிபு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Narendra Modi pandemic VACCINE
இதையும் படியுங்கள்
Subscribe