narendra modi

இந்தியாவில் கரோனாபாதிப்பு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. தினசரி கரோனாபாதிப்பு சற்று குறைந்தாலும், தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகிவருகிறது. கரோனாவால் தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவருகின்றனர்.

Advertisment

நேற்று (14.05.2021) விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சியில் கரோனாகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் கிராமப்புறங்களிலும் கரோனாதீவிரமாக பரவி வருவதாக தெரிவித்தார். இந்தநிலையில், கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி, இன்று உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்த இருக்கிறார்.

Advertisment