இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனாபரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (21.04.20210) ஒரேநாளில்3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. ஒரேநாளில்மூன்று லட்சம் பேருக்கு கரோனாஉறுதியாவது இந்தியாவில் இது முதல்முறையாகும்.
இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை மேற்குவங்கம்செல்ல இருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். நாளை கரோனாநிலை குறித்து உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நடத்த இருப்பதால், நாளை மேற்கு வங்கத்திற்குச் செல்லவில்லை என மோடி கூறியுள்ளார்.