Advertisment

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - அவரச ஆலோசனைக்குப் பிரதமர் மோடி அழைப்பு!

pm modi

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேகாட்டேரிபகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இறந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளதாகவும்அந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ கூறியுள்ளது.

Advertisment

இதனிடையே மும்பையில் குடியரசு தலைவர் கலந்துகொள்ளஇருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி, இன்று மாலை 6.30 மணிக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்புத்துறைஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe