Advertisment

விமான நிலையத்தில் 'தர்ணா' செய்த பிரதமர் மோடியின் தம்பி!

pm brother

Advertisment

இந்தியபிரதமர் மோடியின்தம்பிபிரஹலாத் மோடி. இவர் 'அகில இந்திய நியாய விலை கடை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு'என்ற அமைப்பின் துணைத் தலைவராகஉள்ளார்.

நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவிற்கு வருகை தந்தார். அப்போது அவர் தனது ஆதரவாளர் போலீசாரால் தடுக்கப்பட்டதாகக் கூறி விமான நிலையத்திலேயே அமர்ந்துதர்ணாவில்ஈடுபட்டார். பிறகு தனது ஆதரவாளர் விடுவிக்கப்பட்டதையொட்டிதர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஆனால் பிரஹலாத் மோடியின்ஆதரவாளரானஜிதேந்திர திவாரி, பிரஹலாத் மோடியின் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஒட்டிய போஸ்டரில், அனுமதியின்றி பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்களின் படங்களைப் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர் மீது, மாவட்ட சமூக நல அலுவலரின் புகாரின் பேரில் மோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பிரஹலாத் மோடி கூறியதுபோல் விமானநிலையத்தில் யாரையும்கைது செய்யவில்லைஎன்றுபோலீஸார்கூறியுள்ளனர்.

Advertisment

பிரதமர் மோடியின்தம்பி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ஜிதேந்திர திவாரி, நிகழ்ச்சிநடத்துவதற்கானஅனுமதியைப் பெறவில்லைஎன்றுஉத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

brother Narendra Modi uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe