பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது யூ -டியூபில் வெளியாகி 12 மணிநேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு முன் மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கிறார். பி.எம். நரேந்திரமோடி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 5 திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தேர்தல் சமயத்தில் இந்த படம் வருவது மோடியின் ஒரு பிரச்சார யுக்தியே என கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் பெருமைகளை மட்டுமே பறைசாற்றும் வகையில் இந்த ட்ரைலர் உள்ளதாக கருத்துக்களும் சமூகவலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/X6sjQG6lp8s.jpg?itok=AdI99L-z","video_url":" Video (Responsive, autoplaying)."]}