/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PM_Narendra_Modi-in.jpg)
இந்திய திரைப்பட உலகில் தற்பொழுது பயோபிக் எனப்படும் பிரபலங்களின் உண்மை வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் பாணியிலான திரைப்படங்கள் அதிகமாம் வெளிவருகின்றன. கடந்த ஆண்டு பேட்மேன் முதல் சஞ்சு வரை பல பயோபிக் படங்கள் வெளிவந்தன. இந்த வரிசையில் தற்பொழுது இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. விவேகம் படம் மூலம் தமிழில் அறிமுகமான விவேக் ஓபராய் இதில் மோடியின் வேடத்தில் நடிக்கிறார். மேலும் இதற்கு முன் மேரி கோம், சரப்ஜீத் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓமங் குமார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மட்டுமே விவேக் ஓபராய்க்கு 7 மணிநேரம் மேக்கப் போடப்பட்டதாக இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படமானது உலகம் முழுவதும் 23 மொழிகளில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படம் கூட 7 மொழிகளில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)