Published on 06/04/2021 | Edited on 06/04/2021

தமிழகம் உள்ளிட்ட ஐந்து சட்டசபை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் உள்ள மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பெரிய அளவில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.