narendra modi

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளாகும். இந்தநிலையில்,இந்தப் பத்ம விருதுகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த எழுச்சியூட்டும் நபர்களைப் பரிந்துரைக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகபிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவில் பல திறமையான நபர்கள் உள்ளனர்.அவர்கள் அடிமட்டத்தில் மிகச்சிறப்பான வேலைகளைச் செய்கிறார்கள். பெரும்பாலும், அவர்களில் பெரும்பாலோரை நாம் கண்டதோ, அவர்களைப்பற்றி கேட்டதோ இல்லை. இதுபோன்ற எழுச்சியூட்டும் நபர்களை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களைப்பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், பிரதமர் மோடி விருதுகளுக்குப் பரிந்துரைப்பதற்கான http://padmaawards.gov.in என்ற வலைதள முகவரியையும் ட்வீட் செய்துள்ளார்.