PM to consult with state chief ministers on April 27

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.

Advertisment

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.