இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்த ஜெய் சங்கரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்த சுஷ்மா சுவராஜ் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்தார். இதனால் அத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு துறைக்கு நியமிக்கப்படுவார் எனவும், பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்று வரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளார்.

Advertisment

modi

அதே போல் சுஷ்மாவை வெளியுறவு துறை அமைச்சராகவும், ஜெய் சங்கரை வெளியுறவு துறை இணை அமைச்சராக நியமிக்கவும் தீவிரமாக ஆலோசனை நடந்து வருகிறது. பிரதமர் அளிக்கும் தேநீர் விருந்தில் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விருந்தில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார், வைத்தியலிங்கம் உள்பட யாரும் பங்கேற்வில்லை.