கரோனா வைரஸின் ஆபத்து இன்னும் நீடிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டாக்டர் பாலாசாகேப் விகே பாட்டீலின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "கரோனா வைரஸின் ஆபத்து இன்னும் நீடிக்கிறது. மகாராஷ்ட்ராவில், நிலைமை இன்னும் கொஞ்சம் கவலை அளிக்கிறது. நான் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்,முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் முக்கியம்.இதில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.