ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை கோலத்தை அழித்து, கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர் தமிழக அதிகாரிகள். பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தில் கட்சிக்காரர்கள் கொடுத்த கோரிக்கை மனுவால், தேர்தல் அதிகாரிகளுக்கு மயக்கமே வந்துவிட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பிரச்சனை இதுதான் - ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஃபேன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலகங்களில் தேர்தல் முடியும் வரை ஃபேன்களை அகற்ற வேண்டும் என்பது தான் தெலுங்கு தேசம் கட்சியினரின் கோரிக்கை. இது தொடர்பாக சித்தூர் தேர்தல் அதிகாரியிடம் மனுவும் அளித்துள்ளனர். அதில், 'தேர்தல் முடியும் வரை அரசு அலுவலகங்களில் ஃபேன் இருக்கவும் கூடாது; இயங்கவும் கூடாது' என்று கோரிக்கை விடுத்திருப்பது தான் ஹைலைட். வெயில் காலத்தில் இப்படி ஒரு கோரிக்கை மனுவா? ஆத்தாடி.. சமாளிக்க முடியுமா? என விழி பிதுங்கி நிற்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.