Skip to main content

ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளின் வீடுகள் புனரமைப்பு - ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

jarkhant cm

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து பேட்மிண்டனில் வெண்கலமும், ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

 

மேலும், இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலம் வென்றுள்ளது. இதற்கிடையே, காலிறுதிக்குக் கூட தகுதி பெறாது என கணிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிவரை முன்னேறி சாதித்ததோடு, ரசிகர்களின் இதயங்களையும் வென்றது.

 

இதனையடுத்து, மகளிர் ஹாக்கி அணிக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்தநிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த அம்மாநில வீராங்கனைகளுக்குத் தலா 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும், வீராங்கனைகளின் பழைய வீடுகள், செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டப்படும் நிரந்தர வீடுகளாக மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

மேலும், இந்திய அணி அரையிறுதிவரை செல்ல முக்கிய பங்காற்றிய வந்தனா கட்டாரியாவிற்கு, 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

“குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்” - ஹேமந்த் சோரன் ஆவேசம்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Ready to withdraw from politics if given evidence for allegations Hemant Soran 

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதன்படி கடந்த 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் இன்று (05.02.2024) சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூடியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் புதியதாகப் பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக 29 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர்.

முன்னதாக அமலாக்கத்துறை காவலில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டார். அப்போது ஹேமந்த் சோரன் பேசுகையில், “தனது கைதுக்கு மத்திய அரசின் பழிவாங்கும் செயலே காரணம். தான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 ஆம் தேதி இந்தியாவுக்கே கருப்பு நாள். ஆளுநர் மாளிகையின் சதியே கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும். பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது. நில மோசடி வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்” எனத் தெரிவித்தார்.