Skip to main content

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கொடிகள், பேனர்கள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் முடிந்த பிறகு அவை கழிவுகளாக குவிந்துவிடுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வில்சன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு, தேர்தல் பிரசாரத்தின்போது, குறிப்பாக, பேனர், விளம்பர பலகை போன்றவற்றில், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் கமிஷனும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் எடுத்திருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். ஆகவே, இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையத்துக்கும், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு 10 ரூபாய் டெபாசிட்'-'வாவ்' சொல்ல வைத்த வண்டலூர் பூங்காவின் புதிய விதி!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

 'Deposit of 10 rupees for plastic bottles' - Welcome to the new rule of Vandalur Park!

 

வண்டலூர் பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் வீசப்படுவதை தவிர்க்க 10 ரூபாய் டெபாசிட் முறையை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 1,200 க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அலட்சியமாக வீசிவிட்டு செல்வது தொடர்ந்து வரும் நிலையில் அவை அங்குள்ள விலங்குகளுக்கும், பூங்காவின் செழுமைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை பயன்படுத்துவோர் முறையாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வுகளை வழங்கினாலும் அவை முழு நிறைவை தரவில்லை.

 

இந்நிலையில் பூங்கா நிர்வாகம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுடன் வரும் சுற்றுலா பயணிகளிடம் 10 ரூபாய் டெபாசிட் பெறும் முறையை கடந்த ஐந்தாம் தேதி அமல்படுத்தியது. அதன்படி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுடன் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 10 ரூபாய் டெபாசிட் பெற்றுக்கொண்டு அவர்கள் கொண்டு வரும் பாட்டிலில் பிரத்தியேக ஸ்டிக்கர் ஒட்டப்படும். சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் பொழுது பிளாஸ்டிக் பாட்டிலை திரும்ப கொடுத்தால் டெபாசிட்டாக கொடுத்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

 

இந்த முறை மிகவும் வரவேற்பையும்,  நல்ல பலனையும் கொடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே 2,300க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

 

 

Next Story

அதிகரிக்கும் பாலிதீன் குப்பைகள்... அபாய நிலையில் இருக்கும் உயிரினங்கள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

Increasing polythene debris ... endangered species!

 

மக்காத பாலிதீன், பிளாஸ்டிக் பைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. மலை மலையாய் குவியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பை கழிவுகளைத் தீயிட்டு எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மற்றொரு பக்கம் கால்நடைகளும் இந்தப் பாலிதீன் பைகளைத் திண்பதால் அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதனால் அனைத்து கடைகளிலும் பாலிதீன் பைகளைத் தடை செய்திருந்தனர். டீக்கடைகள் முதல், மளிகை, காய்கறி, மட்டன், மீன் கடைகள் உள்ளிட்ட கடைகளும் தடையை மீறியதால் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதங்களும் விதிக்கப்பட்டன.

 

ஆனால் தற்போது மீண்டும் பாலிதீன் கலாச்சாரம் தொடங்கியுள்ளதால், வீதிகளில் மலைபோல் குவிக்கப்பட்டு காற்றில் பறந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு வீதியில் சுற்றிய ஒரு பசுமாடு, அங்கு குவிக்கப்பட்டிருந்த பாலிதீன் பை குப்பைகளிலிருந்து இரை தேடிய நிகழ்வு வேதனையாக இருந்தது. அந்த பாலிதீன் பைகளும் பசுவின் வாய்க்குள் சென்றது. இதனால் இதுபோன்ற கால்நடைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும். இதேபோலத்தான் ஒவ்வொரு ஊரிலும் பாலிதீன் குப்பைகள் ஆக்கிரமித்துவருகிறது. இனி மழைக்காலம் வீதியில் வீசப்படும் பாலிதீன் கழிவுகள் தண்ணீரோடு கால்வாய்களில் அடைத்து சாக்கடை தண்ணீரும் கலந்து வீதிகளில் ஓடி பல்வேறு நோய்களைத் தரவுள்ளது. அதற்குள் மீண்டும் பாலிதீன் கலாச்சாரத்தை முடக்கினால் மழை நீரை, நிலத்தடி நீராக சேமிக்கலாம்.