Advertisment

புத்தகங்களைப் பார்த்து எழுதும் தேர்வு; விரைவில் அமல்படுத்த திட்டம்

Plan to implement soon on open book examination

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு. தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது.

Advertisment

பிரேம்குமார் கல்ரா தலைமையிலானவல்லுநர் குழு பரிந்துரைகளின்படி, புதிய முயற்சிகளை அவ்வப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எடுத்து வருகிறது. அந்த வகையில் சி.பி.எஸ்.இ, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில், வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கணிதம்,அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

examination exam cbse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe