ADVERTISEMENT

காங்கிரசை பலவீனப்படுத்தும் மம்தா - காங். மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

03:30 PM Oct 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையப்போவதாக தொடர்ந்து தகவல் வெளியானது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இன்னும் இணையவில்லை. கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைமை நினைப்பதாலும், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்துவிட்டு அதன்மூலமாக திரிணாமூல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவலாம் என சந்தேகத்தை எழுப்பியதாலும் அவரை காங்கிரஸில் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

இந்தநிலையில், ‘பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையலாம். ஆனால் காங்கிரஸின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவரான ஹரிஷ் ராவத் தனியார் ஊடக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “இந்திய குடிமகனாகவும், சுதந்திர போரட்டம் மற்றும் காங்கிரஸின் மதிப்புகளில் நம்பிக்கை வைத்துள்ள எவரும் கட்சியில் சேரலாம். எனவே பிரசாந்த் கிஷோரும் இணையலாம். நாங்கள் எப்போதும் புதிய யோசனைகளை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் கட்சியை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அடமானம் வைக்க முடியாது. அவர் மிகவும் திறமையான நபராக இருக்கலாம், ஆனால், 'பாபா, நீங்கள் எங்களுக்காக வேலை செய்யுங்கள். நாங்கள் வேலை செய்வதை நிறுத்திவிடுகிறோம்’ என்று சொல்ல முடியாது.

கிஷோர் அனைவராலும் அறியப்பட்டவர். மேலும் நிபுணத்துவம் பெற்றார். ஆனால் காங்கிரசில் ஒரு முறை உள்ளது, அவர் அதை ஏற்க வேண்டும். அவர் அந்த வழியாக வர வேண்டும். முதலில், அவர் ஒரு உறுப்பினராக ஆக வேண்டும். பிறகு மற்ற விஷயங்கள் நடக்க தொடங்க வேண்டும். நாங்கள் அவருக்குப் பொருத்தமான நிலையை, பொருத்தமான பணியைக் கண்டுபிடிப்போம். பிரசாந்த் கிஷோர் போன்ற ஒருவரை வேலைக்காக காக்க வைக்கமாட்டோம்.” இவ்வாறு ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

அதன்பின்னர் மம்தாவை பற்றி பேசிய ஹரிஷ் ராவத், அவர் காங்கிரஸை பலவீனப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாங்கள் இளைஞர் காங்கிரசிலும், பாராளுமன்றத்திலும் நீண்டகாலம் ஒன்றாக இருந்தோம். மோடி மற்றும் அமித் ஷாவுடன் தேர்தலில் அவர் சண்டையிட்ட விதத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கட்சி இல்லாத சில மாநிலங்களில், தேர்தல் நேரத்தில், காங்கிரசிலிருந்து சில நபர்களை அழைத்து அவர்களுக்கு சில பதவிகளைக் கொடுக்கக் கூடாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதைச் செய்வதன் மூலம் நீங்கள் கோவா மற்றும் வடகிழக்கில் காங்கிரஸை பலவீனப்படுத்துகிறீர்கள். இது எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு எந்த வகையிலும் உதவாது" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT