ADVERTISEMENT

கர்நாடகாவில் இறங்கிய 2000 கோடி-பாஜக பலே திட்டம் !!

08:38 PM May 18, 2018 | vasanthbalakrishnan

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் பக்கம் 104 எம்.எல்.ஏக்களே உள்ளன நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதன் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நாளை மாலை நான்கு மணிக்கு பெருபான்மையை பாஜக நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் திட்டத்தில் பாஜக முன்னேறிவருகிறது. முதலில் ஒரு எம்.எல்.ஏவிற்கு 100 கோடி என்ற நிலை மாறி தற்போது 150 கோடி என விலை உயர்த்தப்பட்டு பேரம்பேச முயல்வதாக கூறப்படுகிறது . இதன்படி குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது என்பதுதான் பாஜகவின் பலே திட்டத்தின் நோக்கமாகவும் கூறப்படுகிறது. இதற்காக பாஜக அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் கர்நாடாவில் இறங்கியுள்ளதாகவும். அவர்களின் திட்டப்படி 10 முதல் 15 எம்.எல்.ஏக்களை வாங்கினாலும் குறைந்தபட்சம் சுமார் 2000 கோடி தேவைப்படும் என்பதாலேயே பாஜகவிற்கு நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபர்கள் ரொக்க பணத்துடன் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது .

இதன் தொடர்ச்சியாகவே காங்கிரஸ் எம்.எல்.ஏ பசவான கவுடாவிற்கு பாஜக தரப்பில் 150 கோடி பேரம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவொருபக்கம் இருக்க எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசுவதில் புதுப்புது யுத்திகளையும் பாஜக கையாண்டு வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழு ஹைத்திராபாத்தில் முகாமிட்டிருக்க பாஜக தரப்போ எம்.எல்.ஏக்களின் மனைவி, குடும்பத்தார், குடும்ப உறுப்பினர்கள், தொழில் நண்பர்கள் என தொடர்புகொண்டு அவர்கள் மூலமும் பேரம்பேசும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் மூலம் 10 அல்லது 15 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கவேண்டும் என்ற திட்டமிட்டு 2000 கோடி இறக்கியுள்ளதாக கர்நாடகாவில் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT