Advertisment

ஒரே நாளில் அடுத்தடுத்து தமிழகம் வரும் பாஜக தலைவர்கள்... காலையில் அமித் ஷா, மாலையில்....

gfhfghgf

Advertisment

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஈரோடு வருவதாக அக்கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று காலை தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழகத்தில் பாஜக குறிப்பிட்ட தொகுதிகளை தங்கள் வசமாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்தியிலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க‌ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்‌தில் மதுரைக்கும் திருப்பூருக்கும்‌ வந்து சென்றுள்ளார். மேலும் வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர உ‌ள்ளார். இந்நிலையில், அமித் ஷாவின் இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்றிரவு 8 மணிக்கு சென்னை வருகிறார். இவரின் வருகையின் போது பாஜக வின் கூட்டணி உறுதி செய்யப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Piyush Goyal Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe