Advertisment

மாவோயிஸ்ட், நக்சல் பிடியில் விவசாயிகள் போராட்டம்! - பியூஷ் கோயல்...

piyush goyal

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான, விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 17 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் விவசாயிகள்,உண்ணாவிரதம், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், விவசாயிகளின் போராட்டம், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்களின் பிடியில்இருந்து விடுவிக்கப்பட்டால், சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்துஇருப்பதைஅவர்கள் புரிந்துகொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர், "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைநடத்த24 மணி நேரமும்மத்திய அரசு தயாராக உள்ளது. மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களின் பிடியில்இருந்துவிவசாயிகளின் போராட்டம்விடுவிக்கப்பட்டுவிட்டால், நமது விவசாயிகள்,சட்டங்கள், அவர்களின் நலம் சார்ந்தும் நாட்டின் நலன் சார்ந்தும் இருப்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். அதன்பிறகும்அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், "இந்தியாவின் விவசாயிகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.அவர்கள் அமைதியைநேசிப்பவர்கள்.அவர்களைநாங்கள் மதிக்கிறோம். மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்சக்திகள்,நாடு முழுவதும் உள்ள மக்கள் மீது தாக்கத்தைஏற்படுத்த விவசாயிகள், அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனவும்தெரிவித்துள்ளார்.

farmer protest. Piyush Goyal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe