Skip to main content

மாவோயிஸ்ட், நக்சல் பிடியில் விவசாயிகள் போராட்டம்! - பியூஷ் கோயல்...

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

piyush goyal

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான, விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 17 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் விவசாயிகள், உண்ணாவிரதம், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகளின் போராட்டம், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டால், சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து இருப்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்த 24 மணி நேரமும் மத்திய அரசு தயாராக உள்ளது. மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களின் பிடியில் இருந்து விவசாயிகளின் போராட்டம் விடுவிக்கப்பட்டுவிட்டால், நமது விவசாயிகள், சட்டங்கள், அவர்களின் நலம் சார்ந்தும் நாட்டின் நலன் சார்ந்தும் இருப்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். அதன்பிறகும் அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "இந்தியாவின் விவசாயிகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அவர்கள் அமைதியை நேசிப்பவர்கள். அவர்களை  நாங்கள் மதிக்கிறோம். மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் சக்திகள், நாடு முழுவதும் உள்ள மக்கள் மீது தாக்கத்தை  ஏற்படுத்த விவசாயிகள், அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Chief Minister M.K. Stalin Union Minister praises 

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இதையடுத்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், “கலாச்சாரம், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான நிஹர் ஷாஜிக்கு எழுந்து நின்று பாராட்டுவோம்.‘மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டினால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை வைத்து செயல்படும் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.