Advertisment

'டங் ஸ்லிப்' ஆகிவிட்டது... 'நியூட்டன்' பேச்சு குறித்து பியூஸ் கோயல் விளக்கம்...

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் இந்திய பொருளாதார மந்தநிலை குறித்து பேசினார்.

Advertisment

piyush goyal about newton speech

நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டு வராதீர்கள். ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை. எனவே ஊடகங்களில் வரும் தகவல்கள் மூலம் பொருளாதாரத்தை கணக்கிடாதீர்கள்" என்றார்.

Advertisment

நியூட்டன் கண்டறிந்த புவியீர்ப்பு விசையை ஐன்ஸ்டீன் கண்டறிந்ததாக அவர் கூறியதை பலரையும் கிண்டல் செய்தனர். அரசியல் கட்சியினர் முதல், இணையவாசிகள் வரை பலரும் அவரை கிண்டல் செய்தனர். இந்நிலையில் அவர் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "டங்க் ஸ்லிப் காரணமாக ஒரு தவறு செய்துவிட்டேன். ஐசக் நியூட்டனுக்கு பதிலாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று கூறிவிட்டேன். நாம் அனைவரும் தவறு செய்வோம். ஒருபோதும் தவறு செய்யாத ஒரு நபர், எதையும் புதிதாக முயற்சிப்பதில்லை. நான் தவறு செய்வதற்கு பயந்தவன் இல்லை " என தெரிவித்துள்ளார்.

Indian economy Piyush Goyal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe