நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை பெற்றுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உள்ள 11 மாநில முதல்வர்களை ஒன்றுதிரட்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன் முயற்சியெடுத்துள்ளார்.

Advertisment

pinarayi vijayan writes letter in caa issue to eleven state cms

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூடிய கேரள சட்டசபை கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 மாநில முதல்வர்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போல குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் 11 மாநில முதல்வர்களை பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.