Skip to main content

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி - குறிவைக்கும் பினராயி விஜயன்? 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

PINARAYI VIJAYAN

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி  இருந்து வரும் நிலையில், கட்சியின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேசிய மாநாடு ஏப்ரல் மாதத்தில் கேரளாவின் கண்ணூரில் நடைபெறவுள்ளது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி சீதாராம் யெச்சூரியே மேலும் மூன்று வருடங்களுக்குப் பொதுச்செயலாளராகத் தொடரலாம் என்றாலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் பொதுச்செயலாளர் பதவிக்கு குறிவைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ளது. இதனால் கட்சிக்குள் பினராயி விஜயன் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வருவது கவனிக்கத்தக்கது.

 

2016 ஆம் ஆண்டு கேரளாவின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றதிலிருந்து, அவர் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பையேற்ற பினராயி விஜயனுக்குப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா என ஒரு பக்கம் கேள்வியெழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.