Advertisment

வீட்டிலேயே மிக எளிமையாக நடைபெற்ற பினராயி விஜயன் மகளின் திருமணம்...

pinarayi vijayan daughter marriage

கரோனா பரவலுக்கு மத்தியில், கேரள முதலவர் பினராயி விஜயனின் மகளின் திருமணம் அவரது வீட்டில் எளிய முறையில் நடத்தப்பட்டுள்ளது.

Advertisment

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மக்கள் வீணா தைக்கண்டியேல் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (டி.ஒய்.எஃப்.ஐ) தேசியத் தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோரின் திருமணம் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது.

Advertisment

கிளிஃப் ஹவுஸில் நடைபெற்ற எளிய திருமண விழாவில், இரு தரப்பிலிருந்தும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாணவராக இருந்தபோது அரசியலில் நுழைந்து, சி.பி.ஐ.(எம்)-இன் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயின் முன்னாள் தேசிய இணைச் செயலாளராக இருந்த ரியாஸ், கடந்த பிப்ரவரி 2017 இல் DYFI- இன் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஆவார். அதேபோல, தொழில்முனைவோரான வீணா தைக்கண்டியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Kerala Pinarayi vijayan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe