nambi narayanan

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மேல் தொடரப்பட்ட வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு கேரள அரசாங்கம் 50 லட்சம் பணம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் வழங்க கேரள அரசின் கேபினட் அமைச்சர்கள் சந்திப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு ஜோடித்த காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இழப்பீட்டுப் பணத்தைப் பெற வழி உள்ளதா என்று சட்டத் துறையிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment