Pilots safely rescue for flight incident in Agra 

விமானப்படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மிக் - 29 போர் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். அதே சமயம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய விமானம் தீ பிடித்து எரிந்தது. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் விமானிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisment

விமானம் தீ பிடித்து எரிந்தது தொடர்பான காட்சிகள் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில் விபத்திற்குள்ளான விமானம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. இந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அடம்பூரில் இருந்து புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.