Advertisment

"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...

pilot akilesh sharma's wife in medical observation

கேரள விமான விபத்தில் தனது கணவர் இறந்த செய்தியை நம்ப முடியாத விமானி அகிலேஷ் சர்மாவின் துக்கம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

கேரளாவில் கடந்த வாரம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில், விமானி அகிலேஷ் சர்மா உயிரிழந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவில் பணியில் சேர்ந்த அகிலேஷ் சர்மா, 2018 ஆம் ஆண்டு மேகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மேகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில், அவரது உடல்நலன் கருதி கடந்த வெள்ளிக்கிழமை விமான விபத்தில் அகிலேஷ் உயிரிழந்ததை மேகாவின் குடும்பம் அவரிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், அவரது உடல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார் மேகா.

Advertisment

தனது கணவனின் உடலைப் பார்த்து, "யார் இவர்" எனக் கேட்டுக் கதறி அழுதுள்ளார். பின்னர், "இது அகிலேஷ் இல்லை. அதற்கான வாய்ப்பே இல்லை. நான் பிரசவம் பார்க்கவுள்ள மருத்துவமனையில் அகிலேஷ் காத்திருக்கிறார் நான் அங்கே போக வேண்டும்" எனக்கூறி அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்த உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துசென்றுள்ளனர். தற்போது மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள மேகாவுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் குழந்தை பிறக்க உள்ள சூழலில், தனது கணவரின் இழப்பால் சுய நினைவு இழந்தது போல் காணப்படுவது பலரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Air india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe