pondichery

Advertisment

நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவான பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழா இன்று புதுச்சேரியில் தொடங்கியது. இதை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி துவங்கி வைத்தார். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 25 நாடுகளை சேர்ந்த 124 பன்மொழி திரைப்படங்கள் கலந்துகொள்கின்றன. இந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் படம் என்கிற பிரிவில் தேசிய விருது வாங்கிய ’டூலெட்’ திரைபடமும் இந்த சர்வதேச விழாவில் கலந்துகொள்கிறது.