இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அணியில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே கழட்டிவிடப்பட்டாலும்ஓய்வை அறிவிக்காமல் இருந்து வந்தார். இந்தநிலையில்அவர் விரைவில் ஓய்வைஅறிவித்துவிட்டு, ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் குழுவில் சேரப்போவதாகத்தகவல் வெளியானது.
அதனைத்தொடர்ந்து பஞ்சாப் தேர்தலையொட்டி, யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்கை பாஜக குறி வைப்பதாகவும், விரைவில் இவர்கள்இருவரும் பாஜகவில் இணையலாம்எனவும்தகவல் வெளியானது. ஆனால் அது பொய் செய்தி என ஹர்பஜன் சிங் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்தநிலையில்பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, ஹர்பஜன் சிங்குடன் இருக்கும் புகைப்படத்தை, "படத்தில் சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளன. பாஜி என்ற ஒளிரும் நட்சத்திரத்துடன்" என்ற தலைப்போடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையொட்டி ஹர்பஜன் சிங், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பஞ்சாப் காங்கிரஸில் இணைவார்என எதிர்பார்க்கப்படுகிறது.