A photoshoot that blackened the bride's face; Verbal game

Advertisment

திருமண நிகழ்வுகளின் போது காலகட்டத்திற்கு ஏற்பட்ட நூதன முறையில் பரிசளிப்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் விலை உயர்வின் போது பெட்ரோலை மணமக்களுக்குப் பரிசளிப்பது, வெங்காய விலை உயர்வின் போது அதனை கிலோ கணக்கில் வாங்கி பரிசளிப்பது எனக் கூறலாம்.

அதேபோல் திருமண நிகழ்வின் பொழுது எடுக்கப்படும் போட்டோஷூட் நிகழ்வுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒன்றாக மாறிப்போனது. அண்மையில் கேரளாவில் யானையின் அருகே போட்டோஷூட் நடத்திக்கொண்டிருந்த தம்பதியை நோக்கி யானை மட்டையை வீசிய காட்சி வைரலாகி இருந்தது.

இந்நிலையில் விளையாட்டாக நடைபெற்ற போட்டோஷூட் மணப்பெண்ணின் முகத்தை கருக்கிய சம்பவம் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. இளஞ்ஜோடி ஒன்று திருமணம் முடிந்த கையோடு போட்டோஷூட் எடுப்பதற்காக ஃபயர் கன் இரண்டை வாங்கி வந்து மாஸாக கையில் பிடித்திருப்பது போல் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அப்பொழுது மணப்பெண்ணின் கையிலிருந்த கன்னில் இருந்து வெளியேறிய நெருப்பு பொறிதிசைமாறி மணப்பெண்ணின் முகத்தை கருக்கியது. இதனால் அந்த மணப்பெண் கன்னை கீழே போட்டுவிட்டு அலறிதுடித்தார். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.