Skip to main content

2023 ஜூலை வரை பிஎச்.டி. இல்லாமல் உதவி பேராசிரியர் ஆகலாம் - கரோனா தந்த வாய்ப்பு! 

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

assistant professor

 

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர முதுகலை பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், மாநில அளவிலான செட் தேர்விலோ அல்லது தேசிய அளவிலான நெட் தேர்விலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்தநிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு, உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. கட்டாயம் என மத்திய அரசு புதிய விதிமுறையைக் கொண்டுவந்தது.

 

மேலும், இந்தப் புதிய விதிமுறை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலாகும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில், இந்த விதிமுறையை அமல்படுத்துவதை  2023 ஆண்டு ஜூலை மாதம்வரை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனைப் பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 

udanpirape

 

கரோனா சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தனது கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை பி.எச்.டி. முடிக்காதவர்களும் உதவி பேராசிரியர்கள் ஆக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; தேர்வு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
4000 Assistant Professor posts; Exam Notification


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தமிழக அரசின் முடிவுக்கு எதிராக ஆளுநர் கடிதம்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Governor's letter against the decision of Tamil Nadu Govt

 

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, உருவாக்கப்பட்டன. மாதிரிப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 

இதையடுத்து மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கடந்த 2 ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உயர்கல்வித்துறை சார்பில் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினைத் தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரிப் பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்றும், கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.