ஆறாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

phase 6 voting started in loksabha election

டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று இந்த ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள கடைசிகட்ட தேர்தல் வரும் மே 19 நடக்கும் நிலையில், மே 23 அன்று நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.