Skip to main content

இந்தியாவிற்கு கரோனா தடுப்பூசி; கை விரிக்கும் மாடர்னா; கண்டிஷன் போடும் ஃபைசர்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

CORONA VACCINE

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்கு அண்மைக்காலமாக தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள், தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் அளித்திருந்தன. ஆனால், ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட அமெரிக்கத் தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவோம் என்றும், மாநிலங்களுக்கு நேரடியாகத் தடுப்பூசிகளை வழங்கமாட்டோம்  என்றும் தெரிவித்துவிட்டன. 

 

இதற்கிடையே மத்திய அரசும் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முயற்சித்து வந்தது. இது தொடர்பாக ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. இந்நிலையில், மாடர்னா நிறுவனம், இந்தாண்டு இந்தியாவிற்கு அளிக்க தங்களிடம் கூடுதல் தடுப்பூசிகள் இல்லையெனவும், அடுத்தாண்டு இந்தியாவில் ஒரு முறை செலுத்தக்கூடிய (சிங்கிள் டோஸ்) கரோனா தடுப்பூசியை தாங்கள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும், மத்திய அரசு வட்டாரங்கள், "ஃபைசர் நிறுவனம் இந்தியாவிற்கு ஜூலையில் ஒரு கோடி தடுப்பூசிகள், ஆகஸ்ட்டில் ஒரு கோடி தடுப்பூசிகள், செப்டம்பரில் இரண்டு கோடி தடுப்பூசிகள், அக்டோபரில் ஒரு கோடி தடுப்பூசிகள் என இந்தாண்டே ஐந்து கோடி தடுப்பூசிகளைத் தரத் தயாராக இருக்கின்றது. ஆனால், அதனால் தங்களுக்கு ஏற்படும் இதர இழப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், இந்தியாவுக்கு தேவையான மருந்துக்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தி ஆர்டர் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மத்திய மருந்துகள் ஆய்வகத்தில் அவற்றின் தடுப்பூசிகளை பரிசோதிக்க தேவையானவற்றை செய்யவேண்டும், ஒப்புதலுக்குப் பிந்தைய சோதனைகளின் தேவைகளில் தளர்வு அளிக்கவேண்டும் எனவும் நிபந்தனைகளை விதிக்கிறது" எனக் கூறியுள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காந்தி சிலை அவமதிப்பு; மோடிக்கு எதிரான வாசகங்களால் பரபரப்பு!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

canada mahatma gandhi statue incident viral in social media  

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்கக் கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த அமைப்பின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து காவல் நிலைய சிறையில் அடைத்த சம்பவத்தில் அம்ரித் பால் சிங் தலைமையில் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவரை விடுவிக்கக் கூறி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதனையடுத்து அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சில நாட்களுக்கு கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், இந்தியா சார்பில் கனடாவிற்கு பரிசாக அளிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி வெண்கல சிலையானது ஒன்று ஓன்டாரியோ மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வியாழக்கிழமை பெயிண்ட் ஊற்றிச் சிதைத்ததுடன், சிலையின் கீழ்ப்பகுதியில் மோடிக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிரான வாசகங்களையும் எழுதியுள்ளனர். இந்த செயல் தற்போது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டனில் செயல்படும் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.