பைப்லைன் மூலமாக நேபாள் நாட்டிற்கு பெட்ரோலிய பொருட்களை அனுப்பிவைப்பதற்கான திட்டத்தினை இந்திய பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

petrolium pipeline starts working between india and nepal

Advertisment

Advertisment

இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் நேபாளம், தனது பெட்ரோலியம் தேவைகளை பூர்த்தி செய்ய சாலை போக்குவரத்தையே முழுவதுமாக நம்பியிருக்கும் நிலையில் உள்ளது. பெரும்பாலும் இந்தியாவிலிருந்து டேங்கர் லாரிகள் வழியாகவே நேபாளத்திற்கு பெட்ரோலிய பொருட்கள் செல்கின்றன. இந்நிலையில் பைப்லைன் மூலம் இந்தியா, நேபாளம் இடையே பெட்ரோலிய பொருட்களை அனுப்ப 1996-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

ஆனால் பல ஆண்டுகளாகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கின. தற்போது இந்த பணிகள் முடிக்கப்பட்டு குழாய் வழியாக பெட்ரோலிய பொருட்கள் கொண்டுசெல்லும் திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோல் அந்நாட்டில் இந்திய மதிப்பில் லிட்டர் 67 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.